பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரை இழிவுப்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்புவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் மற்றும் இந்துக் கடவுள்களை கொச்சைப்படுத்தி வரும் குற்றவாளிகளை தண்டிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துவங்கப்பட்ட முக்குலத்தோர் பாதுகாப்பு படையின் தலைவர் வழக்கறிஞர் டாக்டர். எஸ் கே சாமி தேவர் கண்டனம் !! பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்ளங்களில் பரப்பி வரும் சமூக விரோதிகள் மீது காவல்துறை சட்டபடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மற்றும் இந்து மதக் கடவுள்களை கொச்சைப் படுத்தி வரும் குற்றவாளிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் கண்டன போராட்டம் தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் பதிவு செய்யப்பட்ட பிரிவான முக்குலத்தோர் பாதுகாப்பு படையின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பிரம்மாண்டமான போராட்டம் அரங்கம் அமைக்கப்பட்டு இன்று (29.12.2019) தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கண்டன முழக்கமிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக ஆர்பாட்டத்துக்குத் தலைமைத் தாங்கிய அந்த அமைப்பின் தலைவரும் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான டாக்டர். எஸ் கே சாமி தேவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது :- பசும்பொன் உ. முத்து ராமலிங்கத் தேவர் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்துக்கு மட்டும் பாடுப்பட்டவரல்ல. அனைத்து சமுதாயத்துக்கும் பாடுப்பட்ட தேசியத் தலைவர், அனைத்து மதத்துக்கும் பொதுவானவர். முஸ்லிம் பெண்மணி ஒருவரிடம் தாய்பால் குடித்து வளர்ந்தவர். கிறிஸ்தவர்கள் நடத்திய பள்ளியில் படித்து உயர்ந்தவர், தேசியத்தையும், தெய்வீகத்தையும் இருகண்களாக பாவித்து ஆன்மீக வழியில் அரசியல் மற்றும் வாழ்க்கை நடத்தியவர். வீரமும், விவேகமும் மிக்க பசும்பொன் தேவர், தீண்டாமை ஒழிப்பு, சுதந்திர போராட்டம், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய போது அதற்கு பெரும் ஆதரவளித்தார். தனது தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்றவர். தனது சொத்துக்கள் பலவற்றை தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு வழங்கியவர். இப்படி அனைத்து சமுதாயத்துக்கும் பல நன்மைகளை செய்த பசும்பொன் தேவரின் வரலாற்றை அழிக்க நினைப்பதும், சமீபகாலமாக அவரை தவறாக சித்தரித்து, அவரது புகைப்படத்தை ஆபாசமாக படத்தின் முகத்தில் ஒட்டி இழிவுபடுத்தி பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் சில சமூக விரோதிகள் பதிவிட்டும், பரப்பியும் வருகிறார்கள். தாய்நாடு மற்றும் மக்களின் நலனில் அக்கறை கொண்டு உழைத்து முன்னேறிய எந்த ஒரு தலைவரையும் இப்படி ஆபாசமாக, இழிவாக சித்தரிப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே எந்த தலைவர்களையும் யார் தவறாக சித்தரித்தாலும் காவல் துறை நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இந்து மத கடவுள்களையும், இந்து மதத்தையும் விமர்சித்து பேசுவததை போல, பசும்பொன் தேவரை விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். இதனை அனுமதிக்க முடியாது. தமிழக அரசும் , காவல்துறையும் உடனடியாக தலையிட்டு சமூக விரோதிகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்த நேரிடும் இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் 7550015555, 7550014444.